கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மீண்டும் கூட்டுவதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அவ்வாறு பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டினால், அவரை கைது செய்யுமாறு மாகலகந்தே சுதந்த தேரர் கோரியுள்ளார்.
கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை பலவந்தமாக கூட்டுவதற்கு முயற்சிக்கப்படுமாயின் இராணுவத்தை பயன்படுத்தி, கரு ஜயசூரியவையும் அவருக்கு துணை நிற்கும் சகலரையும் கைதுசெய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கைது செய்யப்படும் நபர்களை தனிமைப்படுத்தல் ஒழுங்குவிதிகளுக்கு அமைய, தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பிவைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
புதிய சிங்ஹல ராவய தேசிய அமைப்பினால், நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.