கொரோனா தொற்றுக்குப் பின்னர் கடுமையாக அமைதிகாத்த, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவுக்கு அவசரமாக கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.
பொலன்னறுவையில் கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டதை அடுத்து, பொலன்னறுவை மக்கள் அச்சத்துடனும் பீதியுடனும் உள்ளனர்.
ஆகையால், இன்னும் நோயாளர்கள் பொலன்னறுவையில் இருக்கின்றார்களா என்பது தொடர்பில் தேடியறிந்து நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா மற்றும் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதலின் ஓராண்டு நிறைவின் போது, முன்னாள் ஜனாதிபதி அமைதியாக இருந்துவிட்டார். அது தொடர்பில் சமூக ஊடகஙகளில் பல்வேறான பதிவுகள் இடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.