மீண்டுமொரு அரசியல் நெருக்கடி ஏற்படும் என்ற அச்சத்தால், பாராளுமன்றத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்கு பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் களமிறங்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்துக்கு வெளியே, பாராளுமன்ற வளாகத்திலிருக்கும் பொலிஸ் காவலரண்களில் பொலிஸார் விலக்கப்பட்டு, படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் உத்தரவு வலியமையற்றுவிட்டது என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்த பின்னணியிலேயே பாராளுமன்றத்தின் பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன.