web log free
July 01, 2025

யாழில் இரண்டு பெண்கள் சிக்கினர்

யாழ்ப்பாணம் மாநகரப் பகுதியில் உள்ள வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் நேற்று (25) இரவு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவர் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் அந்த வீட்டிலையே தனிமைப்படுத்த பொலிஸார் மற்றும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் மனோகரா தியேட்டருக்கு அண்மையாக உள்ள வீடொன்றிலேயே அண்மைக்காலமாக கலாசார சீரழிவு இடம்பெற்று வந்த நிலையில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீட்டை இன்று இரவு 7.45 மணியளவில் சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தினார்.

அத்துடன் அங்கு விடுதி நடத்தி வந்தவரையும் பொலிஸார் விசாரணை நடத்தினர். அதன்போது அங்கிருந்தவர்கள் விசாரணைகளின் போது தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கியுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd