கொழும்பில், ஐந்து பாடசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக மாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பில், சமூக வலைத்தளங்களிலும் பதிவிடப்பட்டுள்ளன.
கொழும்பு ரோயல் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, இந்து கல்லூரி, மாநாம வித்தியாலயம், டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம் ஆகியனவே, இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களா மாற்றப்படவுள்ளன.
கொழும்பு ரோயல் கல்லூரி, கடற்படையினரை தனிமைப்படுத்துவதற்கும், மாநாம வித்தியாலயம் இராணுவத்தினர் தனிமைப்படுத்துவதற்கும் ஒதுக்கப்படவுள்ளது. எனினும், இவ்விரு பாடசாலைகளிலும் தற்போது படையினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரோயல் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மற்றும் டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயம், கொழும்பு இந்து கல்லூரி, ஆகியன நாளை மறுதினம் (28) முதல், தனிமைப்படுத்தல் மத்திய நிலையமாக மாற்றப்படவுள்ளது என அறியமுடிகிறது.
கொழும்பு மத்தியில் இருக்கும் பாடாசாலைகளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களாக பயன்படுத்துவதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.