தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலேயே, பிரதான நீதவான் எதிர்வரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மாகாண சுகாதார சேவைகள் பணி்பாளரின் பணிப்பின் பேரிலேயே பிரதான நீதவான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதான நீதவான் (பெண்) இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அந்த நீதவான் கணவன், வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரியாவார். அவர், கடந்த 12ஆம் திகதிக்கும் 20ஆம் திகதிக்கும் இடையில் விடுமுறை பெற்று, எம்பிலிப்பிட்டியவிலுள்ள நீதவான் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்துள்ளார்.
பிரதான நீதவானின் கணவனுக்கு கொரோனா தொற்றிருப்பது இதுவரையிலும் கண்டறியப்படவில்லை.
எனினும், அவரது கணவன், கடந்த 20ஆம் திகதியன்று கடற்படை முகாமுக்கு மீண்டும் கடமைக்கு திரும்பியுள்ளார்.
வெலிசர கடற்படை முகாமில், கொரோனா தொற்றுக்கு உள்ளான கடற்படை வீரர் கடந்த 22ஆம் திகதியன்று கண்டறியப்பட்டார்.
பிரதான நீதவான், கடந்த 22ஆம் திகதியன்று நீதிமன்றத்துக்குச் சென்று வழக்குகள் சிலவறறை விசாரித்துள்ளார். அதன்போது, சுகாதார பாதுகாப்பு முறைமைகளை அவர் பின்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.