இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சில நாட்களுக்குள் விரைவாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நேற்று (26) இரவு 9.54க்கு வெளியான அறிக்கையின் பிரகாரம் 505 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது.
சுகமடைந்தோர் எண்ணிக்கை 120ஆக உள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸால் இறக்கும் உடல்களை அகற்றுவதற்காக ஆயிரம் பாதுகாப்பான உறைகள் வழங்குமாறு செஞ்சிலுவை சங்கத்தை கேட்டு சுகாதார அமைச்சு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.