ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் போது தேசிய அடையாள அட்டையில் இருக்கும் இறுதி இலக்கத்தின் ஒழுங்கின் பிரகாரம் 0,1,2,3,4,5,6,7,8 மற்றும் 9 என்ற இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட
எனினும், நாடளாவிய ரீதியில், இன்று திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதனால், 0,1,2,3,4,5,6,7,8 மற்றும் 9 என்ற வரிசையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியிருந்தன.
திங்கட்கிழமையன்று 0,1 ஆகிய இலக்கங்களை கொண்டவர்களே, வீடுகளிலிருந்து வெளியேறவேண்டும். இன்று திங்கட்கிழமை ஊரடங்கு என்பதால், அந்த இலக்கத்தை கொண்டவர்களால், வெளியேறமுடியாது.
எனினும், அந்த இலக்கத்தை கொண்டவர்கள், மே 3ஆம் திகதியன்றே வீட்டை விட்டு வெளியேறலாம்.