இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மூன்று முக்கியஸ்தர்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க மற்றும் கடற்படை தளபதி ரியல் அட்மிரல் பியல் டி சில்வா ஆகிய மூவரே இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் மேற்படி மூவரும் கலந்துகொண்டுள்ளனர்.
அங்கு, வெலிசர கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை அதிகாரி பங்கேற்றிருந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்த மூவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
அதுமட்டுமன்றி, அந்த விழாவுக்கு சென்ற சகலரும் தனிமைப்படுத்தப்படவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.