கொரோனா வைரஸினால் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 600 ஐ அண்மித்துள்ளது. இரவு 11.30க்கு வெளியான அறிக்கையின் பிரகாரம், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 588 ஆகும்.
இரவு 10 மணியுடன் நிறைவடைந்த 14 மணி நேரத்தில் 61 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அந்த எண்ணிக்கை 584 ஆக உயர்ந்திருந்தது. அதற்கிடையிலே் மேலும் நால்வர் இனங்காணப்பட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் மேலும் பல பரிசோதனை முடிவுகள் வெளிவர இருந்தன. ஆகையால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600 ஐ எட்டலாம் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.
இன்று அடையாளம் காணப்பட்டிருந்த தொற்றாளர்களில் பலர் 18 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித்த விதானபத்திரண தெரிவித்தார்.
21 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அதில், 180 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் ஆவர். 53 சிறுவர்களும் அடங்குவர்