கொரோனா வைரசை, தங்கள் நாட்டிலிருந்து கிட்டத்தட்ட முற்றிலுமாக அகற்றிவிட்டதாக அறிவித்துள்ளது நியூசிலாந்து. பெண் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் எடுத்த திடமான நடவடிக்கைகள் அந்த நாட்டை இந்த அளவுக்கு வெற்றிகரமாக முன்னேற்றியுள்ளது.
நியூசிலாந்து நான்காம் நிலையிலிருந்து மூன்றாம் நிலைக்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக நேற்று அறிவித்தது. புதிய கொரோனா கேஸ்கள், ஒற்றை இலக்கத்திற்கு குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் நேற்று கொரோனா நோயாளிகள் வெறும் 4 என்ற அளவுக்குத்தான் பதிவாகியிருந்தனர்.
சுகாதார துறை, இயக்குநர் ஜெனரல், ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் இதுபற்றி கூறுகையில், எங்கள் இலக்கை நாங்கள் அடைந்துவிட்டோம் என்ற நம்பிக்கையைத் தருகிறது, இது பூஜ்ஜியம் என்ற அளவுக்கு செல்லவில்லை. ஆனால் கேஸ்கள் எங்கிருந்து வருகின்றன என்பது எங்களுக்குத் தெரியும். எனவே பூஜ்யமாக்குவது பெரிய விஷயமில்லை, என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் ஜசிந்தா எங்கள் குறிக்கோள் முழுமையாக வைரஸ் பாதிப்பை நீக்குதல் என்று ஆஷ்லே ப்ளூம்ஃபீல்ட் மேலும் தெரிவித்தார். நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், கொரோனா வைரஸ் தற்போது அகற்றப்பட்டுவிட்டது. ஆனால் நாடு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் புதிய கேஸ்கள் வர வாய்ப்பு இருக்கிறது.
கடந்த சில நாட்களில், கேஸ்கள் ஒற்றை இலக்கங்களில் இருந்தன, தொற்றுநோய் தாக்கத்தால் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நியூசிலாந்து மக்களின் ஒத்துழைப்பு பாராட்டத் தக்கது. கிட்டத்தட்ட 5 வாரங்கள் பொது முடக்கத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இதை வெற்றிபெறச் செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.