இலங்கையில் ஐந்து மாவட்டங்களை தவிர ஏனைய 20 மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் மையங்களை உருவாக்கிவருவதால், அந்த மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படலாம் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.
நுவரெலியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே நேற்று (28) வரையிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 619 ஆக அதிகரித்துள்ளது.