பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விகாரைக்குள் மறைந்திருந்த பெண்கள் மூவர் கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அந்த விகாரையின் தேரரும் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பின் கீழ், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், திருகோணமலை சேறுநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லங்காபட்டுன பிரதேசத்திலுள்ள விகாரையிலேயே இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க வர்த்தக வலயத்துள்ள ஆடைத்தொழில்சாலையில் கடமையாற்றிய பெண்கள் மூவரே இவ்வாறு விகாரைக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ளார்.
தன்னுடைய வாகனத்திலேயே அந்த தேரர், மேற்படி பெண்கள் மூவரையும் அழைத்துவந்து தங்கவைக்கப்பட்டுள்ளார்.
அப்பெண்கள், வாரியபொல, அம்பலாங்கொட மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கிடைத்த தகவல்களை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார், மேற்கொண்ட சோதனையின் போது, விகாரையின் மறைவான இடத்தில், சட்டவிரோதமான மதுபானம் தயாரிப்பதற்கான பொருட்கள், அகழ்வு பணிகளை முன்னெடுக்கும் உபகரணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், அதற்குப் பின்னரே, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றனர்.