இலங்கைக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்ற நிலையில், தேர்தல் தொடர்பிலான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தை, மே மாதம் 2ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில், கட்சிகளின் செயலாளர்கள் சுயேட்சைக்குழுக்களின் பிரதிநிதிகளுக்கு இடையில், இந்த சந்திப்பு, மே மாதம் 2ஆம் திகதி பிற்பகல் 11 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு பல பிரிவுகளை உள்ளடக்கிய குழுவொன்றையும் நியமித்துள்ளது.
இதில், சுகாதார அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, பொலிஸ், அரச பொது நிர்வாக அமைச்சு உட்பட இன்னும் பல பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அக்குழுவில் அடங்குகின்றனர்.