கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை, செப்டெம்பர் மாத இறுதிக்குள் கண்டுபிடிக்கப்படலாம் எனவும், அதன் விலை சுமார் 1,000 ரூபாயாக இருக்கலாம் எனவும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அடர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.
உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றைக் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சில விஞ்ஞானிகள், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்னும் ஒரு சில மாதங்களில் தடுப்பூசி தயாராகிவிடும் என மேற்படி இந்தியா நிறுவனத்தின் தலைவர், அடர் பூனாவாலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க, இங்கிலாந்து, அமெரிக்க விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.