கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 140 பேர், அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், அந்த வைத்தியசாலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது என சுகாதார பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
ஆகையால் புதிய நோயாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.