கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாத ஐந்து மாவட்டங்கள் இனங்காணப்பட்டிருந்தன.
நுவரெலியா, அம்பாறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில், நேற்று (28) வரைக்கும் கொரோனா தொற்றாளர் இனங்காணப்படவில்லை.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார் என, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி அறிவித்துள்ளது.