முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியூதீன், அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
தன்னை கைது செய்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே அவர், அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பெண் பொலிஸ் பரிசோதகர் நிரோஷினி ஹேவா பத்திரண, அந்த திணைக்களத்தின் பணிப்பாளர், பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்கிரமரத்ன, சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி திலங் பெரேராவினால் இந்த மனு தாக்கதல் செய்யப்பட்டது.
அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தினார் என, மனுதாரரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆகையால், அவர் ஏதோவொரு வகையில் கைதுசெய்யப்படலாம்.
இந்நிலையிலேயே தன்னை கைதுசெய்வதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை விடுக்குமாறு அந்த மனுவில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.