web log free
December 22, 2024

புதைக்கவிருந்த சடலத்தை பொலிஸார் கைப்பற்றினர்

அவசர, அவசரமாக புதைக்கவிருந்த சடலத்தை, கைப்பற்றிய பொலிஸார் அதனை, வைத்தியசாலைக்கு எடுத்து சென்று மரண பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கட்டளையிட்டுள்ள சம்பவமொன்று அட்டனில் இடம்பெற்றுள்ளது. 

சடலம், டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் (28) அன்று வைக்கப்பட்டுள்ளது. அட்டன் தும்புலுகிரிய வீதியில் வசித்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 50 வயதானவரின் சடலமே இவ்வாறு, அவசர அவசரமாக புதைகப்படவிருந்தது.

அவர், தனது வீட்டிவ் 28ஆம் திகதி காலை 10 மணியளவில் மரணமடைந்துவிட்டார். அந்த சடலம் உறவினர்களால் அட்டனிலுள்ள தனியார் மலர்ச்சாலைக்கு ஒப்படைக்கப்பட்டது. 

மலர்ச்சாலையில் உரிமையாளர், மரண சான்றிதல் அல்லது திடீர் மரண பரிசோதகரின் அத்தாட்சிப்படுத்தல் கடிதமின்றி, இறுதி கிரியைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட சடலத்தை,மலர் சாலையில் வைத்துள்ளார். 

இதற்கிடையில், மரணமடைந்தவரின் மனைவி இதுதொடர்பில், அட்டன் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார். 

 

அதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்டபோது, மரண சான்றிதல் அல்லது திடீர் மரண பரிசோதகரின் அத்தாட்சிப்படுத்தல் கடிதமில்லை. எனினும். அப்பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலகர் வழங்கிய வாய்மூலமான உறுதிமொழியை அடுத்த, இறுதி கிரியைக்கான ஏற்பாடுகளை தான் செய்ததாக மலர்சாலையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

எனினும், அதனை மறுத்துள்ள கிராமசேவகர், திடிர் மரண விசாரணை அதிகாரிகாரிக்கு அறிவித்து, மரண பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார். 

வாய்மூலமாக எந்தவிதமான உத்தரவையும் மலர்ச்சாலையின் உரிமையாளருக்கு தான் வழங்கவில்லை என்றும் பொலிஸாரிடம் கிராமசேவர் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் தொடர்பில் லேதிக பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd