ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில், மசாஜ் நிலையத்தில் மசாஜ் செய்துகொண்டிருந்த இளம் பெண்கள் மூவரும், அந்த மத்திய நிலையத்தின் உரிமையாளரும் 21வயதான இளைஞனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை ஸ்பிரிங்வத்த பிரதேசத்திலே இந்த மசாஜ் நிலையம் இருந்துள்ளது. ,
அங்கிருந்த 21,25 மற்றும் 27 வயதுகளுடைய இளம் யுவதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இளைஞன் கெம்லேவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். உரிமையாளர் தியத்தலாவ கதுருகமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அறியமுடிகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மசாஜ் நிலையங்கள் யாவும் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த தகல்களை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.