கடந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த, 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் எதிர்வரு்ம் 4ஆம் திகதியன்று, அலரிமாளிகைக்கு சமூகமளிக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பில், நேற்றைய அமைச்சரவையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தெளிவு படுத்தினர்.
இந்நிலையிலேயே , பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த 225 பாராளுமன்ற உறுப்பினர்களையுமு் அலரிமாளிகைக்கு அழைத்து விளக்கமளிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையிலேயே இவர்கள் அன்றையதினம் காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.