கொரோனா வைரஸ் தொடர்பில், இலங்கையில் இன்றுமாலை நல்ல செய்தி கிடைத்துள்ளது.
சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில், கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும், இன்றுமாலை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 649 ஆகும். 139 பேர் சுகமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.