30 ஆம் திகதி இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் 81 மணிநேரத்துக்கு அமுல்படுத்தப்பட்டது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் நேற்றிரவு 8 மணிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம், இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.
எனினும், இன்று இரவு 8 மணி முதல் எதிர்வரும் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.