பொதுத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகவும் அந்த கூட்டணிக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு படையணிகளை உருவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.
முன்னாள் அமைச்சர்களான வஜிர அபேவர்தன, தயாகமகே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரபெரும, பாலித ரங்கேபண்டார மற்றும் ருவன் விஜேவர்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சங்கீத் சமரசிங்க ஆகியோர் அடங்கிய இரண்டு குழுக்களையே நியமித்துள்ளார் என அறியமுடிகின்றது.
அவ்வணியினர் தற்போதே ஐக்கிய மக்கள் சக்திக்கும், அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர் என அறியமுடிகின்றது.