நாவலபிட்டி நகர சபைத் தலைவர் உள்ளிட்ட பலர், கினிகத்தேன அம்பகமுவவில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பணம், மதுபான போத்தல்கள் உள்ளிட்ட நகரசபை தலைவரின் தனிப்பட்ட வாகனம் மற்றும் அவரது நண்பருகளுக்கு சொந்தமான இரண்டு வாகனங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சோதனையின்போது சந்தேகநபர்களில் இருவர் தப்பி சென்றுவிட்டதாகவும், அவர்களையும் கைது செய்ய தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட 07 சந்தேக நபர்களில் குறித்த ஹோட்டலின் பாதுகாப்புக் காவலரும் அடங்குவார். ஏனைய சந்தேகநபர்கள் நாவலபிட்டி, நோர்டன் பிரிட்ஜ், கலாவெல்தெனிய மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் நாளை ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்டுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்