கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவரின் சடலத்தை, விதிமுறைகளையும் மீறி, அவருடைய உறவினர்களிடம் அந்த சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சியிடம் அச்சங்கம் முறைப்பாடொன்றை செய்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 80 வயதான நபர், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர், அந்தநபர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் ஊடாக, அவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியானது.
கொரோனா தொற்று இருப்பது உறுதியானதன் பின்னர், கடந்த 27ஆம் திகதியன்று அவர் மரணமடைந்துவிட்டார்.
அவரது சடலத்தை பாதுகாப்பான உறைக்குள் இட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. சடலத்தை உறவினர்கள் எரிக்காமல் புதைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நோயாளியை வைத்தியசாலைக்கு அழைத்துவந்தவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.