எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் பங்கு பற்றும் வகையில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அழைப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விட்டிருந்தார்.
அந்த அழைப்பு அர்த்தமற்றது எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, கடந்த மாதம் அலரிமாளி்க்கையில் நடத்தப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது, வேலைத்திட்டங்களை நாங்கள் முன்வைத்திருந்தோம் எனினும், அதனை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.