கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் சிலாபம் ஆகிய மாவட்டங்களை தவிர, ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் ஊரடங்கு சட்டம், 11ஆம் திகதி காலை 5 மணிவரையிலும் தொடர்ந்து நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்க்கை முறைமை மற்றும் நிறுவனங்களின் செயற்பாடுகள், 11 ஆம் திகதியிலிருந்து வழமைக்கு திரும்பும் என்றும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.