தனிமைப்படுத்தல் முகாம்பகளில் தங்க வைக்கப்பட்டிருந்த மேலும் இருவர் மரணமடைந்துள்ளார்.
கொழும்பு. குணசிங்கபுரவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் கடுமையான வயதாகும் என்பதுடன் நோய்வாய் பட்டிருந்தனர் என்றும் அறியமுடிகின்றது.
அவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கின்றதா? என்பது தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பரிசோதனையின் முடிவிலேயே இறுதி முடிவு வெளியாகும்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்த முதியவர் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்றுக் காலை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்ட போது உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.