பாராளுமன்றத் தேர்தலில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தோருக்கான விருப்பு இலக்கம் இன்றையதினம் வழங்கப்பட்டு அதற்கான வர்த்தமானி அறிவித்தல், நாளை (03) வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தாலும் விருப்பு இலக்கம் இன்றையதினம் வழங்கப்படாது என அறியமுடிகின்றது.
இதுதொடர்பில், கட்சி செயலாளர்களுக்கும் சுயேட்சை குழு பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்றையதினம் முக்கியமான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின் போது, தேர்தல் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய விளக்கமளிப்பார்.
அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதியன்று நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டு பொதுத் தேர்தல் அன்றையதினம் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்றும் அதுதொடர்பிலும் இன்றையதினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன.