கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, சுகமடைந்த ஒருவருக்கு மீண்டும் கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜா-எல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர், ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
மார்ச் மாதம் 17ஆம் திகதியன்று வைத்தியசாலையில் அனுமுதி்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்றுக்கொண்டு சுகமடைந்து ஏப்ரல் 17ஆம் திகதியன்று வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
இருதய நோயாளியான அவர், நெஞ்சுவலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதன்பின்னர், ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு மீண்டும் அவர் அழைத்து செல்லப்பட்டு, சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரவிக்கின்றன.