பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்களின் பிரதிநிதிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான குழுவினருக்கும் இடையில், கொழும்பில் இன்று (2) முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட திகதியில் தேர்தலை நடத்துவது என்பது சாத்தியப்படாத விடயமாகும் ஆகையால் விருப்பு இலக்கங்களை வழங்குவதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், ஜுன் 20ஆம் திகதி தேர்தல் நடத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதுதொடர்பில் தீர்மானம் கிடைத்ததன் பின்னரே, இறுதி முடிவை எடுக்கமுடியும் என்றார்.
இதேவேளை, சுகாதார முறைமையின் பிரகாரம் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. ஒரு கட்சி அல்லது சுயேட்சைக்குழுவிலிருந்து ஒருவர் வீதமே கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர்.
அந்த எண்ணிக்கைக்கு மேலதிகமாக இருந்தவர்கள், அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.