ஹக்குரெஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உட்பட ஐவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் போக்குவரத்துக்கான பொலிஸ் அனுமதி பத்திரமின்றி சினொளிபாதமலைக்கு சென்ற போதே இன்று மதியம் 1 மணியளவில் மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான வீதியில் நல்லத்தண்ணி பொலிஸ் சோதனை சாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளனர்.
ஹக்குரெஸ்ஸ பிரதேசபையின் தலைவர் மற்றும் நால்வருமாக ஐந்து பேர் ஹக்குரஸ்ஸ பிரதேச சபைக்கு சொந்தமான லொறியில் சிவனொளிபாதமலைக்கு சென்றுள்ளனர்.
மத்தளை ஹக்குரனை பொலிஸ் சோதனையை தாண்டி அனுமதி பத்திரமின்றி பயணித்த மேற்படி ஐவர் பயணித்த லொறியினை நல்லத்தண்ணி பொலிஸ் சோதணை சாவடியில் சோதனையிட்டபோதே அனுமதிபத்திரமின்றி பயணித்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை சோதனைசாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.