கொரோனா வைரஸ் தொற்று நிலைமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை மே மாதத்துக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படுவதுடன், வெசாக் பௌர்ணமி தினத்துக்கு முன்னர் கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கையை நிறைவு செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மே மாத்துக்கான ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கையும் நாளை ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.