பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று கூட்டமொன்று நடபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பி ஆகிய கட்சிகள், இன்றைய கூட்டத்துக்கு செல்வதில்லையென அறிவித்துவிட்டன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துவிட்டது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் பங்கேற்குமென ஏற்கனவே அறிவித்திருந்தது. எனினும், நேற்று (4)நடத்திய கூட்டத்துக்குப் பின்னர், அக்கட்சி முடிவை மாற்றிக்கொண்டது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலேயே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆகையால், எதிரணியின் சார்ப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது.
இந்நிலையில், மஹிந்த தலைமையிலான கூட்டத்தில் முன்னர் பங்கேற்போம் என முடிவெடித்துவிட்டு, அடுத்து பங்கேற்கமாட்டோம் என முடிவெடுத்துள்ள ஐ.தே.கவின் தீர்மானம் தொடர்பில் பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களிலும் கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
அதிலேயே, சஜித்தின் பின் சென்றார் ரணில் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சஜித் பிரேமதாஸவால் எடுக்கப்பட்ட முடிவின் பின்னால் சென்றே ரணில் முடிவெடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,