விபச்சாரம் செய்யும் தன்னுடைய மனைவியை பயமுறுத்திய கணவன் கைதுசெய்யப்பட்ட சம்பவமொன்று செல்லக்கதிர்காமத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றிருந்த குறித்த நபரின் மனைவி, ஏழு வருடங்களுக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ளார்.
நாடு திரும்ப அவர், வீட்டுக்குச் சென்று அவ்வப்போது விபச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையில் கடுமையான குடும்ப சண்டையும் இடம்பெற்றுள்ளது.
சொல்லி, சொல்லி திருத்துவதற்கு கணவன் முயற்சித்த போதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.
இதனையடுத்து, உள்ளூர் துப்பாக்கியொன்றை வாங்கிக்கொண்டுவந்த அந்த நபர், வீட்டில் மறைத்துவைத்துள்ளார்.
நீ, இனி விபச்சாரத்துக்கு சென்றால் இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
இதனால், அச்சமடைந்த மனைவி, சில வாரங்களாக வீட்டுக்குள்ளே அடைப்பட்டு கிடந்துள்ளார். விபச்சாரத்துக்கும் செல்வதில்லை.
எனினும், வீட்டுக்குள் துப்பாக்கியொன்று சட்டவிரோதமான முறையில் மறைத்துவைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அந்த நபர் கைதுசெய்யப்பட்டார்.
தன்னுடைய மனைவி விபச்சாரம் செய்கிறாள். அதனை தடுப்பதற்காக, அச்சுறுத்தும் வகையிலேயே துப்பாக்கியை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், அதனை ஏற்றுக்கொள்ளாத பொலிஸார், சந்தேகநபரை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.