web log free
December 22, 2024

கணவன், மனைவியாக சென்றதால் பஸ்ஸில் சிக்கல்

தன்னுடைய மனைவியுடன் பஸ்ஸில் சென்ற கணவன் சிக்கலான விபரீதத்துக்கு முகம் கொடுத்துள்ள சம்பவமொன்று குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நேரத்தில், காரியாலயங்களுக்கு செல்வதற்காக பஸ்சேவை நடத்தப்பட்டது.

இதன்போது, பஸ்களில் சமூக இடைவெளியின் பிரகாரம் அனைவரும் அமர்ந்திருந்துள்ளனர்.

அந்த பஸ்ஸில் ஏற்றிய ஜோடியொன்று, ஒரே ஆசனத்தில் மிக அருகருக்கே அமர்ந்திருந்துள்ளனர்.

பஸ் புறப்படுவதற்கு தயாரானது. அப்போது பஸ்ஸில் ஏற்றிய நடத்துனர்.

ஒரு ஆசனத்தில் ஒருவர் அமருமாறு பணித்தார். 

அப்படி ஏலாது இது எனது மனைவி, மனைவியுடன்தான் நான் பயணிப்பேன் என்று அக்கணவன் அடம்பிடித்துள்ளார்.

நீங்கள், கணவனோ மனைவியோ எனக்குத் தெரியாது. உங்களிடம் திருமணப்பதிவை கேட்கவில்லை என்றார்.

எனினும், மனைவியின் அருகே நின்றுக்கொண்டு பயணித்த கணவன், இறங்கவேண்டிய இடத்தில் மனைவியுடன் சேர்ந்து இறங்கி சென்றுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd