கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரித்துள்ளது. அதில், 324 பேர் கடற்படை சிப்பாய்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் 13 பேர் இனங்காணப்பட்டனர். அவர்களில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள். ஏனைய இருவரும் அந்த முகாமிலுள்ள கடற்படையினருடன் நெருங்கி பழகியவர்கள் ஆவார் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.