web log free
December 22, 2024

கொரோனாவினால் கூடாரமும் மாயம்

 சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்துக்கென அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தைக் காணவில்லை என, கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் சங்கம், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

திருகோணமலையில், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தையே காணவில்லை என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த முறைப்பாட்டை, திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில், மேற்படி அமைப்பின் தலைவி நாகேந்திரன் ஆசா, இன்று (04) பதிவு செய்துள்ளார்.

தங்களது போராட்டத்துக்கென அமைக்கப்பட்ட குறித்த கூடாரத்தை, கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தின் போது அகற்றியிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் இதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மிக விரைவில் எடுத்துத் தர வேண்டும் எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd