கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவர்கள் கண்டறிப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை குறைந்து, முழுமையாக குணமடைந்தோரை கொண்டிருக்கும் மாவட்டங்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது,
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்கள் மட்டுமே கொரோனா தொற்றுக்கு உள்ளாகாத மாவட்டங்களாக இருந்தன. இன்னும் இருக்கின்றன.
இந்நிலையில், அந்த மூன்று மாவட்டங்களுடன் சேர்த்து, இன்னும் ஐந்து மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அதில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டையென அறியப்படும் அம்பாந்தோட்டை மாவட்டமும் விடுபட்டுள்ளது.
இதேவேளை, வவுனியா, திருகோணமலை, மாத்தளை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் தற்போதில்லை என சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.