கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், மஹரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.
அந்த பெண், பொல்பெத்திகம பகுதியைச் சேர்ந்தவர் என அறியமுடிகின்றது.
கடற்படை உறுப்பினரின் நெருங்கிய உறவினரான அந்தப் பெண்ணுக்கு, கடற்படையினரின் ஊடாகவே கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பெண், கடுமையான சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எட்டாவது இலங்கையர் மரணமடைந்துள்ளார். இவர் 72 வயதுடைய, குருணாகலைச் சேர்ந்த பெண்ணொருவரென வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் இலங்கையில் 8ஆவது மரணம் சம்பவித்துள்ளது. பெண்ணொருவர் முதலாவதாக மரணமடைந்துள்ளார்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாவர்களின் எண்ணிக்கை, 721 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.