கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் அரச சார்பற்ற அமைப்பு ஒன்றின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த நபர் நடாத்தி வந்ததாக கூறப்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகம் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகம் கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2ம் மாடியில் இயங்கி வந்தநிலையில், சி.ஐ.டி.யினரால் அந்த பள்ளிவாசல் அறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது முக்கிய பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரின் அமைப்பின் பிரதான அலுவலகம் புத்தளம் , மதுரங்குளி பகுதியில் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அதுவும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது