முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பில் அவரது முன்னாள் மனைவியால், தனது கையெழுத்தில் எழுதப்பட்ட கடிதமொன்று தன்னிடம் சிக்கியுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய சம்மன்பில தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி விவகாரத்தை உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் என உள்ளூர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
சம்பிக்க ரணவக்கவின் விவாகரத்து வழக்கை தானே வாதாடினேன் என்றும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவ்விருவரும் சமூகத்துக்கு முகங்கொடுக்கவேண்டும் என்றும் ஆகையால், அந்த ஆவணங்களை பகிரங்கப்படுத்த மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.