இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா பி. டெப்லிட்ஸை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுக்காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது COVID19, பொருளாதார பிரச்சினைகள் மற்றும் தேர்தல் தொடர்பான பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
"அமெரிக்க தூதருடனான சந்திப்பில் COVID19, பொருளாதாரம், இரு நாடுகளிலும் தேர்தல்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன" என்று பிரதமர் ராஜபக்ஷ, ட்வீட் செய்துள்ளார்.
" ஆடை கைத்தொழில், உலகளாவிய கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக PPE களை உருவாக்குகிறது என்று நான் அவளுக்கு அறிவித்தேன். அமெரிக்க வாங்குபவர்களுடன் இணைக்க அவர்கள் இலங்கை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்" என்று ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளர்.
இந்த சந்திப்பில், வெளியுறவு அமைச்சக செயலாளர் ரவிநாத் ஆர்யாசிங்க, பேராசிரியர், ஜி.எல். பீரிஸ், காமினி செனரத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.