கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் நோய் அறிகுறிகள் தென்பட்ட நிலையில் கடந்த ஐந்து வாரங்களாக கொழும்பிலுள்ள மருந்தகங்கள் மற்றும் தனியார் வைத்தியசாலைகள் சிலவற்றுக்கு சென்று மருந்துகளை பெற்றுள்ளதாக கொழும்பு பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணுக்கு நோய் அறிகுறிகள் தென் பட்டு ஐந்து வாரங்களாக தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களில் மருந்துகளை பெற்று உட்கொண்டுவந்துள்ளார்.
,எனினும் அவரின் நோய் அறிகுறிகள் தீவிரமடைந்ததையடுத்து அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தமது சொந்த வாகனத்தில் சென்று தேசிய வைத்தியசாலையில் அனுமதிபெற்றுள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரின் நோய்த் தொற்று தீவிரமடைந்ததையடுத்து இன்று காலை தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமததிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.