கடந்த ஆட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் வீட்டிலிருந்து கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முன்னாள் எம்.பியும், சட்டம் மற்றும் ஒழுங்குகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் நளீன் பண்டாரவுக்கு சொந்தமான குருநாகல் குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள வீட்டிலிருந்தே கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளன.
கசிப்பு போத்தல்களுடன் அவ்வீட்டில் இருந்த மற்றுமொரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
எனினும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, நேற்று (05) கைதுசெய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.