முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக்கொள்வதற்கு தான் தயார் என்று அக்கட்சியின் உப-தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியிலிருந்து விலகிச் சென்று புதிய கட்சியை உருவாக்கியவர்கள் அங்கேயே இருக்கவேண்டும் என்றும் அவ்வாறானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் எவ்விதமான உரிமையை கொண்டாடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
வெயிலில் அலைந்து திரிபவர்கள் சோர்வடையும் போது, இளைப்பாறி செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒன்றும் அம்பலமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குற்றச்சாட்டப்பட்டுள்ள கட்சி, பௌத்தத்துக்கு எதிரானவர்கள், சிறிகொத்தாவுக்கு கல்லெறிந்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.