web log free
December 22, 2024

தனியார் நிறுவனங்களை திறக்க முடிவு

இலங்கையில் உள்ள சகல தனியார் நிறுவனங்களையும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய திறக்க  விசேட செயலணி இணக்கம் தெரிவித்துள்ளது.

கொவிட் -19 வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஸ் குணவர்தனவால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி இணக்கம் தெரிவித்துள்ளது.

அந்த செயலணியில் அங்கம் வகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், இலங்கை முதலாளிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த இணக்கத்தை தெரிவித்துள்ளனர்.

அனைத்து ஊழியர்களின் வேலைவாய்ப்பு பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கொள்கையாகும் என அமைச்சர் இதன்போது கூறினார்.

குறிப்பாக சமூக இடைவெளியை பேணும் அதே வேளையில் சேவை மாற்றத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

சேவை காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் (வீட்டில் இருக்கும் காலத்தில்) சம்பளத்தையும் வழங்கவும் செலுத்தவும், அடிப்படை சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14,500 ரூபாவை விட அதிகரித்த தொகையை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல் ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றை முறையாக செலுத்தவும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

இந்த ஒப்பந்தங்கள் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஜூன் மாத இறுதிக்குள் இந்த குழு மீண்டும் கூடி அப்போதைய நிலைமையை மதிப்பாய்வு செய்யும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் டி.எம். சரத் அபயகுணவர்தன மற்றும் தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஏ.வி. விமலவீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd