web log free
February 08, 2026

இரத்தப் பரிசோதனை


டுபாயில் ஹோட்டலொன்றில் வைத்து கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினார், டுபாய் அல் ரபா பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த குழுவினரிடம் இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதனை நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. அதுதொடர்பிலான அறிக்கை இதுவரையிலும் கிடைக்கவில்லை என அந்தத் தகவல்கள் தெரிவித்தனர்.

இரத்த மாதிரி பரிசோதனையின் போது, தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டால், டுபாய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தத் தகவல்கள் மேலும் தெரிவித்தன.

டுபாயிலிருக்கும் இலங்கை தூதரகம் இதுதொடர்பில், அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd