கொழும்பு, ஆட்டுப்பட்டுத் தெருவில் இளைஞன் ஒருவன் மர்மமான முறையில் மரணமடைந்தமையால் அங்கு பெரும் பரபப்பு ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த இளைஞனே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
மூச்செடுப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாகவே இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.
இளைஞன் திடிரென மரணமடைந்துள்ளமையால், இவ்வாறு பரபரப்பு ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.